மதுரை அருகே கலவரம் - பலர் காயம்
மதுரை:
மதுரை அருகே திருமங்கலத்தில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.
திருமங்கலம் அருகே உள்ளது உரப்பனூர் பஞ்சாயத்து. இதன் தலைவராக இருப்பவர் பாஸ்கர சேதுபதி. இதே பஞ்சாயத்தில் கவுன்சிலராக இருப்பவர் பழனி. இவர்கள் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. அடிக்கடி இரு தரப்பு ஆதரவாளர்களும் மோதிக் கொள்வது வழக்கமாம்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு பள்ளக்காய்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அங்கு நடந்த கோவில் திருவிழாவில் பாஸ்கர சேதுபதியை அழைத்து கெளரவித்தனர்.
இதனால் பழனி தரப்பு ஆத்திரமடைந்தது. இதையடுத்து நேற்று உருட்டுக் கட்டைகள், இரும்புக் கம்பிகள் உள்ளிட்டற்றுடன் பள்ளக்காய்பட்டிக்குச் சென்ற அவர்கள் அங்கிருந்தவர்களைத் தாக்கினர்.
இதையடுத்து சேதுபதியின் ஆதரவாளர்கள், பழனியின் ஆட்களைத் திருப்பித் தாக்கினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல மாறியது. ஆளாளுக்கு தாறுமாறாக தாக்கிக் கொண்டனர்.
இந்த தாக்குதலில் பலர் காயமடைந்தனர். நான்கு பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பள்ளக்காய்பட்டியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications