நைஜீரியா புறப்பட்டார் மன்மோகன்
டெல்லி:
ஐந்து நாள் ஆப்பிரிக்க பயணமாக இன்று நைஜீரியத் தலைநகர் அபுஜாவுக்கு பிரதமர் மன்மோகன் சிங் புறப்பட்டுச் சென்றார்.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள 2வது இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்க மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்கிறார். இதேபோல நைஜீரியாவுக்கும் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
முதலில் நைஜீரியாவில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக இன்று காலை டெல்லியிலிருந்து நைஜீரியத் தலைநகர் அபுஜாவுக்கு பிரதமர் புறப்பட்டுச் சென்றார். புதன்கிழமை அவர் தென் ஆப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் நகரில் நடைபெறும் 2வது இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்க மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார்.
முன்னதாக டெல்லியிலிருந்து கிளம்பும் முன்பு மன்மோகன் சிங் வெளியிட்ட அறிக்கையில், நைஜீரிய அதிபர் அலாஜி உமரு மூசா யாராதுவின் அழைப்பின் பேரில் நான் நைஜீரியா செல்கிறேன். ஆப்பிரிக்காவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடு நைஜீரியா.
மேற்கு ஆப்பிரிக்காவின் தலைமை நாடாக அது திகழ்கிறது. ஆப்பிரிக்க யூனியனிலும் நைஜீரியா முக்கிய நாடாகும். காமன்வெல்த், அணி சேரா நாடுள், ஜி-77 மற்றும் ஐ.நா.வில் நைஜீரியா முக்கியப் பங்கு வகிக்கிறது. இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பிலும் நைஜீரியாவுக்கு முக்கியப் பங்கு உள்ளது.
இந்தியாவைப் போலவே நைஜீரியாவும் ஒரு வளரும் நாடாகும். எனவே இந்தியா சந்திக்கும் அனைத்துப் பொதுப் பிரச்சினைகளையும் நைஜீரியாவும் சந்திக்கிறது.
நைஜீரியாவின் பொருளாதர வளர்ச்சியில் அங்குள்ள இந்தியர்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள் என்பது பெருமை தரும் விஷயமாகும் என்று கூறியுள்ளார் மன்மோகன் சிங்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications