பள்ளிகளில் செல்போன்களுக்குத் தடை
சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு அரசு தடை விதிக்கவுள்ளது. விரைவில் இதுதொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.
மாணவர்களிடையே செல்போன்கள் மூலம் ஆபாச படங்களை அனுப்புவதும், ஆபாச எஸ்.எம்.எஸ்.களை பரிமாறிக் கொள்வதும் அதிகரித்து வருவதாக சிபிசிஐடி போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதுதொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி சென்னையில் சிலரைக் கைது செய்தனர்.
இதையடுத்து பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன்களைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு அரசுக்கு சிபிசிஐடி பரிந்துரைத்தது.
மேலும் பாமக உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளும் செல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கலாம் என யோசனை தெரிவித்திருந்தன.
கர்நாடகத்தில் தற்போது பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவியர் செல்போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்திலும் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன்களைப் பயன்படுத்த தடை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு கோப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பான முடிவை முதல்வர் கருணாநிதி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications