ஆயுத பூஜை: நாடு முழுவதும் கொண்டாட்டம்
சென்னை:
நாடு முழுவதும் ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
அலை மகள், மலை மகள் மற்றும் கலை மகளை வணங்கி கொண்டாடும் விழாதான் நவராத்திரி. ஒவ்வொரு தேவியருக்கும் 3 நாட்கள் என முறை வைத்துக் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவின் கடைசி மூன்று நாட்ளை கலைமகளான சரஸ்வதியை வணங்குவார்கள்.
விழாவின் 9வது நாளான இன்று ஆயுத பூஜையும், சரஸ்வதி பூஜையும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்கள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் நடத்தி மக்கள் கொண்டாடுகின்றனர்.
தொழில் நகரங்களான சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, சேலம், ஓசூர் போன்ற இடங்களில் மக்கள் வெகு விமரிசையாக ஆயுத பூஜையைக் கொண்டாடி வருகின்றனர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு தொழில் நிறுவனம் வளம் பெற படையல் போடுவதற்கு தேவையான தேங்காய், பழம், பொரி, சுண்டல், பூக்கள், மாலைகள், வாழைப்பழம், போன்ர பூசை பொருட்கள் விற்பனை நேற்று முதலே களைகட்டியிருந்தது.
ஆயுத பூஜையை முன்னிட்டு கல்வி நிறுவனங்கள், வங்கிகள், தொழிற்சாலைகள், வாகனங்கள் விற்பனை செய்யும் இடங்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
சென்னையில் உள்ள வடபழனி முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவிலில் வட மாநில மக்கள் பங்கேற்ற தாண்டியா நடன நிகழ்ச்சி நடந்தது. இதேபோல மாநிலத்தின் பல பகுதிகளிலும் தாண்டியா நிகழ்ச்சிகள் நடந்தன.
கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற உப்பிலியப்பன் வெங்கடாசலபதி திருக்ேகாவிலில் தங்கத் தாமரை பூஜை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வணங்கினர்.
நாளை விஜயதசமி தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications