தீர்ப்பு நகல் ரெடி - மீண்டும் சிறை செல்கிறார் சஞ்சய் தத்
மும்பை:
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் 5 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கான தீர்ப்பு நகர் தயாராகி விட்டதால், நடிகர் சஞ்சய் தத் மீண்டும் சிறையில் அடைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நடிகர் சஞ்சய் தத்துக்கு 5 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் புனேயில் உள்ள எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து சஞ்சய் தத் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சஞ்சய் தத்திடம் தீர்ப்பு நகல் இன்னும் வழங்கப்படாததால், அவருக்கு இடைக்கால ஜாமீன் அளித்தது.
தீர்ப்பு நகல் கைக்குக் கிடைக்கும் வரை சஞ்சய் தத் ஜாமீனில் இருக்கலாம். தீர்ப்பு நகல் கிடைத்தவுடன் அவர் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் 20ம் தேதி இடைக்கால ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் சஞ்சய் தத். இந்த நிலையில் இதுவரை அவருக்கு தீர்ப்பு நகலை மும்பை தடா நீதிமன்றம் வழங்காமல் இருந்தது. தற்போது தீர்ப்பு நகலைத் தயாரிக்கும் பணி முடிந்து விட்டது.
இதையடுத்து ஜாமீனில் விடுதலையாகியுள்ளவர்களை நீதிமன்றத்திற்கு வரவழைத்து தீர்ப்பு நகல் வழங்கப்பட்டது. அப்போது சஞ்சய் தத் தவிர 13 பேர் மட்டும் நீதிமன்றத்திற்கு வந்தனர். சஞ்சய் தத்தை நாளை ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நாளை அவருக்கு தீர்ப்பின் நகல் தரப்படும். இதையடுத்து மீண்டும் அவர் சிறையில் அடைக்கப்படுவார். இதையடுத்து வழக்கமான ஜாமீன் கோரி அவரது சார்பில் மனு தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications