ஹவாலா பண மோசடியில் 2 பேர் கைது
சென்னை:
வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆள் அனுப்புவதாக கூறி ஹவாலா பணத்தை வெளிநாட்டுக்கு அனுப்பிய தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த எஸ்கான் கன்சல்டன்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருப்பவர் வேணுகோபால். இதே நிறுவனத்தின் மேலாளராக இருப்பவர் ரத்தினம்.
இருவரும் இன்று காலை சுங்கத்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில் சிக்கினர். இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்னர்.
இந்த நிறுவனம் 11 பேரை சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி , அவர்கள் மூலம் பெருமளவு ஹவாலா பணத்தை அனுப்பி வைக்க முயன்றது. இதையடுத்து சுங்கத்துறையினர் வேணுகோபாலின் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை அவரும், மேலாளரும் கைது செய்யப்பட்டனர்.
பிடிபட்ட 11 பேரிடமும் வெளிநாட்டுக்கு அனுப்பப்படவிருந்த ரூ. 11 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களில் ஐந்து பேர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். 2 பேர் தஞ்சாவூரையும், 2 பேர் புதுக்கோட்டையையும் சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் விருத்தாச்சலம் மற்றும் கன்னியாகுமரியைச் சேர்ந்தவர்கள்.
ஒவ்வொருவரிடமும் ரூ. 1 லட்சம் பணத்தை வேணுகோபால் கொடுத்துள்ளார். இந்தப் பணம் 2 கவர்களில் தலா ரூ. 50,000 என பிரித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கவர்களை சிங்கப்பூர் போகும் வரை பிரிக்கக் கூடாது என்றும், அங்கு விமான நிலையத்தில் ஒருவர் வந்து இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்வார் எனவும் அந்த 11 பேரிடமும் வேணுகோபால் தெரிவித்திருந்தார் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
அனுமதி இல்லாமல் பணத்தைக் கொண்டு சென்ற குற்றத்திற்காக 11 பேருக்கும் தலா ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்தப் பணத்தை 2 நாட்களில் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா!












Click it and Unblock the Notifications