துபாய்: கட்டடம் இடிந்து 2 இந்தியத் தொழிலாளர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
துபாய்:
துபாயில் கட்டிடம் இடிந்து விழுந்ததில், 2 இந்திய தொழிலாளர்கள் பலியானார்கள்.
ஆந்திராவைச் சேர்ந்த ராம் பாபு, வெங்கட்ராவ் ஆகியோர் கட்டிட வேலைக்காக துபாய் சென்றனர். துபாயில் உள்ள டெய்ரா என்னுமிடத்தில் ஒரு கட்டிடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, கட்டிடத்தின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்ததில் இவர்கள் இருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
விபத்தில் பல தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications