அடுத்த நவம்பரில் சேது கால்வாயில் கப்பல்கள் செல்லும்: டி.ஆர்.பாலு
சென்னை:
சேது சமுத்திரக் கால்வாயில் அடுத்த வருடம் நவம்பர் மாதம் முதல் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என மத்திய கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சேது கால்வாய் வழியாக அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் கப்பல் இயக்கப்படும். தொடக்க விழாவில் பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் கருணாநிதி ஆகியோர் கலந்து கொள்வார்கள். சேது கால்வாய் அமைக்கும் பணியில் ஆதம் பாலம் பகுதியில் மட்டும் உச்ச நீதிமன்றத்தின் கட்டளைப்படி அகழ்வுப்பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாக் நீரினை பகுதியில் இப்பணி தொடர்ந்து நடக்கிறது. உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள நிபுணர் குழு சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அலுவலகத்தில், சேது சமுத்திர திட்டம் குறித்து கருத்துக்களை கேட்டு வருகிறது.
வரும் 31ம் தேதி வரை கருத்துக்கள் கேட்கப்படும். கருத்துக்களை ஆய்வு செய்த பின்னர், நிபுணர் குழு தன் அறிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் அளிக்கும். அதன் பின்னர் உச்ச நீதிமன்றம் சேது சமுத்திரத் திட்டம் குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் என்றார் பாலு.












Click it and Unblock the Notifications