போலீஸில் துப்பாக்கியை ஒப்படைத்த சிரஞ்சீவி தம்பி
ஹைதராபாத்: சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜாவுக்கு எங்களால் எந்த ஆபத்தும் ஏற்படாது. அவரை நாங்கள் ஒன்றும் செய்ய மாட்டோம் என்று சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாணம் கூறியுள்ளார். மேலும் தனது துப்பாக்கியையும், போலீஸில் அவர் ஒப்படைத்துள்ளார்.
நடிகர் சிரஞ்சீவியின் 2வது மகள் ஸ்ரீஜா, வீட்டை விட்டு வெளியேறி தனது காதலர் ஷிரீஷ் பரத்வாஜை சமீபத்தில் ரகசியத் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து இருவரும் தலைமறைவாகி விட்டார்கள்.
ஸ்ரீஜாவின் இந்த அதிரடிக் கல்யாணத்தால் ஆந்திராவே பரபரப்பாகிக் கிடக்கிறது. சிரஞ்சீவியின் வீட்டுக்கு தினசரி பெருமளவில் ரசிகர்கள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் திடீரென நேற்று ஸ்ரீஜாவும், பரத்வாஜும் பாதுகாப்பு கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், இருவருக்கும் பாதுகாப்பு அளிக்கும்படி மாநகர காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டது.
மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு கூறி நடிகர் சிரஞ்சீவிக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
எனவே காதல் தம்பதியினர் டெல்லியில்தான் தங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இன்னொரு திருப்பமாக, சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாணம், சினிமாவில் வருவது போல உடலில் பெரிய துண்டைப் போர்த்தியபடி, கையில் துப்பாக்கியுடன் காவல் நிலையத்திற்கு வந்தார். அவர் வருவதை அறிந்ததும் நூற்றுக்கணக்கான போலீஸார் அங்கு குவிந்து விட்டனர்.
காவல் நிலையத்திற்குப் போய் விட்டுத் திரும்பிய பவன் கல்யாண் கூறுகையில், எங்களால் ஸ்ரீஜாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறுகிறார்கள், பேசுகிறார்கள். நாங்கள் ஏன் அவரை மிரட்ட வேண்டும், கொல்ல முயற்சிக்க வேண்டும். அதற்கு என்ன அவசியம் உள்ளது.
என்னிடம் உரிமம் பெற்ற துப்பாக்கி இருப்பதால்தான் இவ்வாறு கூறுகிறார்களா என்று தெரியவில்லை. அதனால்தான் இன்று துப்பாக்கியை போலீஸில் ஒப்படைக்க வந்தேன். ஒப்படைத்து விட்டேன்.
எனது அண்ணன் அவர்களை மன்னித்து விட்டதாக கூறியுள்ளார். எனவே அவர்கள் வீட்டுக்குத் திரும்ப வேண்டும்.
அவர்களைத் தேடும் எண்ணம் எங்களுக்கு இல்லை. காவல்துறைக்கும், எங்களுக்கும் பல வேலைகள் உள்ளன. அதை நாங்கள் பார்க்க வேண்டும். எங்களின் நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை என்றார் பவன் கல்யாண்.
பவன் கல்யாண் இப்படிக் கூறினாலும் கூட, சிரஞ்சீவி தரப்பிலிருந்து ஒரு படையே, ஸ்ரீஜா, பரத்வாஜ் இருப்பிடத்தை படு தீவிரமாக தேடி வருவதாக ஆந்திராவில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications