3வது அணியுடன் பேச்சு: இடதுசாரிகளுக்கு மொய்லி கண்டனம்
ஹைதராபாத்: அணு சக்தி ஒப்பந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கூட்டணியுடன் பேச்சு நடத்தி வரும் நிலையில், அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், 3வது அணியுடன் இடதுசாரிகள் பேச்சு நடத்தியிருப்பது தவறானது என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வரும் இடதுசாரிக் கட்சிகள் திடீரென டிராக் மாறி 3வது அணி பக்கம் திரும்பியுள்ளன. கடந்த 2 நாட்களாக 3வது அணித் தலைவர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ஏ.பி.பர்தான் சந்தித்துப் பேசியுள்ளனர்.
இது காங்கிரஸ் கட்சியை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லி நேற்று ஹைதராபாத் வந்தார்.
அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக இடதுசாரிகள் தெரிவித்துள்ள கவலைகள் குறித்து ஆராய கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இரு சுற்று பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது. ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் 3வது அணித் தலைவர்களுடன் இடதுசாரித் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியிருப்பது தேவையற்றது, துரதிர்ஷ்டவசமானது என்றார்.
இதற்கிடையே, அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு தயார் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த மத்திய அரசு தயங்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் விவாதம் நடத்த நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்றார்.
ஆனால், வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் மட்டுமே நடத்தப்பட வேண்டும். வெறுமனே விவாதம் நடத்துவது என்பது பயன் தராது என பாஜக கோரி வருவது குறிப்பிடத்தக்கது.-
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications