கோவை சிறுவர் சிறையில் இருந்து 12 பேர் தப்பியோட்டம்
கோவை: கோவை சிறுவர் சிறையில் வார்டனைத் தாக்கிவிட்டு 12 சிறுவர்கள் தப்பியோடிவிட்டனர். இதில் 4 பேர் மட்டும் பிடிபட்டுள்ளனர்.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி உள்ளது. இங்கு 53 சிறுவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு சாரங்கபாணி (வயது 45) என்பவர் சிறை வார்டனாக உள்ளார். நேற்று இரவு சிறையின் உள்பகுதியில் இருந்த தண்ணீர் குழாயை சில சிறுவர்கள் வேண்டுமென்றே உடைத்துள்ளனர். இந்த நீர் சிறுவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் தண்ணீர் புகுந்தது.
இதையடுத்து வார்டன் அந்த அறைக்குள் சென்றார். அப்போது மின்சார வினியோகத்தை நிறுத்திய சிறுவர்கள் வார்டன் சாரங்கபாணியின் முகத்தில் போர்வையால் சுற்றி அவரைத் தாக்கி கீழே தள்ளினர்.
அவர் சுதாரித்து எழுவதற்குள் 12 சிறுவர்கள் கதவை திறந்து கொண்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு சாரங்கபாணி தெரிவித்தார். இதையடுத்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தரப்பட்டு போலீசார் உடனடி ரோந்து மற்றும் கண்காணிப்பு வேட்டையில் இறங்கினர்.
இதில் இரவு 12 மணியளவில் காந்திபுரம் பஸ் நிலையத்தில் வைத்து கார்த்திக், மனோஜ்குமார், சிவமணி, பிரபாகரன ஆகிய 4 பேரை காட்டூர் போலீசார் மடக்கிப் பிடித்தனர்.
தப்பியோடிவிட்ட மேலும் 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தப்பிய சிறுவர்களில் சுள்ளான் என்பவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவன் ஆவான். இன்னொருவனான பிரபாகரன் ஏற்கனவே 3 முறை சிறையில் இருந்து தப்பி ஓடி பிடிபட்டவன்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications