அதிமுகவிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ஜெ மறுவாழ்வு
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அக் கட்சியின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள், பிரமுகர்கள் பலரை மீண்டும் கட்சியில் இணைத்துள்ளார் பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
அதிமுகவினர் ஆங்காங்கே கூண்டோடு விஜய்காந்தின் தேமுதிகவில் ஐக்கியமாகி வருவது அதிகரித்து வருகிறது.
இந் நிலையில் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில்,
அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டிருந்த வேலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த உமா விஜயகுமார், ஓ.ஆர்.சம்பத், கே.மனோகரன், ஆறுமுகம், சூளை செல்வம், சுந்தரவள்ளி, ரெங்கநாதன், மனோகரன், ஜி. ஆறுமுகம் ஆகியோர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படுகிறார்கள்.
அதே போல திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி, சண்முகம், கடலூர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த ராஜா,
வட சென்னை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் மங்கை ரகுபதி மேலும் கோவை, திருச்சி, தேனி மாவட்டங்களில் நீக்கி வைக்கப்பட்டிருந்த நிர்வாகிகள் சிலரும் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தங்களது செயலுக்கு வருந்தி நேரிலும், கடிதம் மூலமும் மன்னிப்பு கோரி தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ள வேண்டி இவர்கள் கேட்டுக் கொண்டதால் இன்று முதல் மீண்டும் உறுப்பினர்களாக அதிமுகவில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.
-
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications