சத்துணவுடன் வாழைப்பழம் தர கோரிக்கை
திருச்சி: தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்தின் கீழ் வாழைப் பழமும் கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தோட்டக் கலை பயிர் உற்பத்தியாளர்கள் சங்கம் முதல்வர் கருணாநிதிக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக மாநில விவசாயத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு இந்த சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது. இதுகுறித்து சங்கத் தலைவர் புலியூர் நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சத்துணவுத் திட்டத்தில் முட்டைகளை சேர்த்துள்ள தமிழக அரசின் நடவடிக்கை பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது.
அதேபோல சத்துணவுடன் வாழைப் பழத்தையும் இணைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாழைப்பழத்தில் நிறைய சத்து இருப்பதால் அது குழந்தைகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். அவர்களை நலமுடன் வைத்திருக்க உதவும்.
எனவே சத்துணவில் வாழைப்பழத்தையும் சேர்க்க முதல்வர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நாகராஜன்.












Click it and Unblock the Notifications