விரைவில் 'ஸ்மார்ட் கார்ட்' டிரைவிங் லைசென்ஸ்கள்!
நாகர்கோவில்: தமிழகத்தில் ஸ்மார்ட் கார்ட் டிரைவிங் லைசென்ஸ்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் பகுதி அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந் நிலையில் அது தகுதி உயர்த்தப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா மார்த்தாண்டம் பஸ் நிலையத்தில் நடந்தது. இதில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு,
டிரைவிங் லைசென்ஸ் வழங்கும் முறையில் ஸ்மார்ட் கார்டு முறையை அறிமுகப்படுத்தவுள்னேம். இதன்மூலம் லைசென்ஸ்களில் மோசடி செய்ய முடியாது. இந்த கார்டுகளில் உள்ள போட்டோக்களையோ, பெயரையோ மாற்ற முடியாது.
முதல் கட்டமாக சென்னை, கடலூர், சிவகங்கை மாவட்டங்களில் இந்த ஸ்மார்ட் கார்ட் லைசென்ஸ்கள் அறிமுகப்படுத்தப்படும். பின்னர் தமிழகம் முழுவதும் இந்த கார்டுகள் அறிமுகமாகும் என்றார்.












Click it and Unblock the Notifications