ஊட்டியில் கடும் மழையால் நிலச்சரிவு: பெண் பலி
ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு பெண் ஒருவர் பலியானார்.
ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இடைவிடாமல் தொடர்ந்து பெய்த மழையால் ஊட்டியில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் மூடப்பட்டுவிட்டன.
பிரதான சாலைகளான ஊட்டி-கடலூர், ஊட்டி-கோத்தகிரி சாலை, ஊட்டி-குன்னூர், ஊட்டி-மஞ்சூர் ஆகிய பாதைகள் மண் சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஊட்டி முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது.
சாலைகளை சீர் செய்யும் பணியில் தீயணைப்புப் படையினரும், நெடுஞ்சாலைத் துறையினரும் ஈடுபட்டுள்ளனர். விடிய விடிய இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஊட்டியில் இன்னும் தொடர்ந்து மழை பெய்து கொண்டுள்ளது. நொண்டிமேடு அருகே ராம்தாஸ் நகர் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பத்மநாபன் என்பவரின் வீடு புதைந்தது.
இதில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். தீயணைப்புப் படையினர் 3 மணி நேரம் போராடி இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பத்மநாபனின் மகன் சபரீஷ், மகள் சாந்தாமணி ஆகியோரை மீட்டனர். பத்மநாபனின் மனைவி கமலா மண்ணில் புதைந்ததில் பலியாகிவிட்டார். பத்மநாபன் வெளியூர் சென்றிருந்ததால் உயிர் தப்பியுள்ளர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications