என்னை கொல்ல சதி: பிரதமரிடம் மம்தா புகார்
கொல்கத்தா: என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி என்னை கொல்ல சதி நடக்கிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பிரதமரிடம் புகார் செய்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி நந்திகிராம் சென்ற போது அவருடைய காரின் மீது கம்யூனிஸ்ட் தொண்டர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மம்தா பானர்ஜி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இது குறித்து பிரதமருக்கு மம்தா அனுப்பியுள்ள புகாரில்,
என்னை படுகொலை செய்ய சதி நடக்கிறது. கடவுளுடைய அருளால் தான் நான் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் தப்பினேன். என்னை துப்பாக்கியால் சுட்டவர்கள் 303 ரக துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தி உள்ளனர். என் கார் மீது அந்த துப்பாக்கி குண்டுகள் பட்டு சிதறின.
இந்த ரக துப்பாக்கிக் குண்டுகளை போலீசார்தான் பயன்படுத்துவார்கள். அது எப்படி கம்யூனிஸ்ட் தொண்டர்களிடம் வந்தது என்று தெரியவில்லை. என் மீது துப்பாக்கி சூடு நடந்தபோது, என்னுடன் வந்த போலீஸ் பைலட் வாகனத்தை காணவில்லை. இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இதற்கு முன்பும் ஒரு தடவை என்னை கொல்ல முயற்சி நடந்தது. இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன். மேற்கு வங்க மக்களுக்காக தொடர்ந்து பாடுபடுவேன். மக்களுக்காக நான் உயிரை விடவும் தயாராக இருக்கிறேன்.
நந்திகிராமில் அமைதி ஏற்படுத்துவதற்கு நாங்கள் விரும்புகிறோம். ஆனால் அங்குள்ள கிராம மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கிறது. இதனால் தான் அப்பகுதியில் தொடர்ந்து பிரச்சனை நீடிக்கிறது என்றார் மம்தா பானர்ஜி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications