பெண் தாசில்தாரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி
நாகர்கோவில்: சட்டவிரோதமாக கருங்கல் ஏற்றிச் சென்ற மினி லாரியை மறித்த பெண் தாசில்தாரை லாரியை ஏற்றி கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
விளவங்கோடு தாசில்தாராக உள்ளவர் பார்வதி. இவர் முள்ளூர்துறை, ராமன்துறை பகுதிகளில் நடந்து வரும் கடலரிப்பு தடுப்பு சுவர் கட்டி வரும் பணிகளை பார்வையிடுவதற்காக பார்வதி சென்றார்.
முள்ளூர்துறை பகுதியில் சென்றபோது அந்த வழியாக கருங்கல் ஏற்றி வந்த மினி லாரியை வழி மறித்தார். டிரைவரிடம் கருங்கல் பாரம் ஏற்றி செல்ல முறையான அனுமதி உள்ளதா, என்று பார்வதி கேட்டார்.
ஆனால் மினி லாரி டிரைவரிடம் அனுமதியில்லை. இதையடுத்து லாரியை வேகமாகக் கிளப்பி பார்வதியை மோதி தள்ளிவிட்டு ஓட்டிச் சென்றார்ய
இதில் பார்வதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருக்கு பலத்த காயமும் ஏற்பட்டது. இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரூபன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி பைங்குளம் நெடுவிளை வீடு பகுதியை சேர்ந்த சிவராஜ்குமார் என்ற அந்த டிரைவரைக் கைது செய்தார்.
கரைவேட்டிகள் உதவியோடு சட்டவிரோதமாக மணல், கல் அள்ளிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் அதைத் தடுக்கும் அதிகாரிகளை கொல்லவும தயங்குவதில்லை. தமிழகத்தில் இதற்கு முன் பல தாசில்தார்கள் லாரி ஏற்றி கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எளிதில் ஜாமீனில் வந்துவிடலாம் என்பதால் இந்தக் கொலைகளைச் செய்ய டிரைவர்களும் தயக்கம் காட்டுவதில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications