பிரமோத் மகாஜன் மீது தம்பி பிரவீண் பரபரப்பு புகார்
மும்பை: சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த பாஜக தலைவர் பிரமோத் மகாஜன் குறித்து, அவரை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தம்பி பிரவீண் மகாஜன் பரபரப்பு குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
பாஜகவின் இளம் தலைவர்களில் முக்கியமானவராக விளங்கியவர் பிரமோத் மகாஜன். கடந்த ஆண்டு மும்பையில் உள்ள அவரது வீட்டில் வைத்து, தம்பி பிரவீண் மகாஜனால் சுட்டுக் கொல்லப்பட்டார் பிரமோத்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பிரவீண் மகாஜன் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மும்பை கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கை நீதிபதி எஸ்.பி. தவேரே விசாரித்து வருகிறார்.
தற்போது பிரவீண் மகாஜன் வாக்குமூலம் கொடுத்து வருகிறார். முதல் நாள் வாக்குமூலம் அளித்தபோது தான் பிரமோத் மகாஜனை சுடவில்லை என்று கூறியிருந்தார் பிரவீண். நேற்று 2வது நாளாக அவர் வாக்குமூலம் அளித்தார். அப்போது பிரமோத் மகாஜனின் தனிப்பட்ட குணங்கள் குறித்து அவர் பரபரப்பு குற்றச்சாட்டுக்களைக் கூறத் தொடங்கினார்.
இதனால் கோர்ட் ஹாலில் பெரும் பரபரப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டது. இதையடுத்து பிரவீண் மகாஜனின் வாக்குமூலத்தை நிறுத்திய அரசு வக்கீல் நிதீன் பிரதான், பிரவீண் மகாஜன் கூறும் புகார்களால், அதனுடன் தொடர்புடையவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படலாம். அவர்களுக்கு மன உளைச்சல் மற்றும் பிற சிரமங்கள் ஏற்படலாம். எனவே பிரவீண் மகாஜனின் வாக்குமூலத்தை ரகசிய வாக்குமூலமாக பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று நீதிபதிக்கு கோரிக்கை விடுத்தார்.
ஆனால் அதை எதிர்த்த பிரவீணின் வக்கீல் ஹர்ஷத் பாண்டா, பிரவீண் பல உண்மைகளை வெளிப்படுத்த விரும்புகிறார். எனவே இதை ஓபன் கோர்ட்டில்தான் கூற அனுமதிக்க வேண்டும். உண்மைகள் வெளி வர வேண்டும் என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பின்னர் பிரவீண் மகாஜனின் வாக்குமூலத்தை ரகசிய வாக்குமூலமாக பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனால் பிரமோத் மகாஜன் குறித்து பிரவீண் மகாஜன் கூறிய பரபரப்பு குற்றச்சாட்டுக்கள் ரகசிய வாக்குமூலமாக, நீதிபதி முன்னிலையில் பதிவு செய்யப்பட்டன.
இருப்பினும் பிரமோத் மகாஜனின் தனிப்பட்ட கேரக்டர் உள்ளிட்டவை குறித்து பிரவீண் மகாஜன் பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலத்தில் அளித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications