ரைஸ் மில் புகைக் கூண்டு இடிந்து 6 பேர் பலி
ஈரோடு: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே அம்மன்கோவில் என்ற இடத்தில் அரிசி ஆலையின் 75 அடி உயர புகைக் கூண்டு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகிரி, அம்மன்கோவிலில் வெங்கடாஜலபதி ரைஸ் மில் என்ற அரிசி ஆலை உள்ளது. இங்கு புதிதாக 75 அடி உயரத்தில் புகைக் கூண்டு கட்டப்பட்டு வந்தது. இந்த புகைக் கூண்டை வெறும் செங்கற்கள் மற்றும் செம்மண்ணை வைத்து கட்டி வந்தனர்.
கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக புகைக் கூண்டு கட்டும் பணி நிறுத்தப்பட்டிருந்தது. நேற்று மழை இல்லாததால் மீண்டும் பணி தொடங்கியது.
அப்போது மாலையில் திடீரென புகைக் கூண்டு சடசடவென சரிந்து நொறுங்கி விழுந்தது. இதில் கட்டுமானத் தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து தீயணைப்புப் படையினர், போலீஸார் விரைந்து வந்தனர். பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு இடிபாடுகளை அகற்றி அதில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் 6 பேரை உயிரற்ற உடல்களாகத்தான் மீட்க முடிந்தது.
மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விடிய விடிய மீட்புப் பணிகள் நடந்தன. இந்த சம்பவம் குறித்து தாசில்தார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications