திமுக தலைவருக்கு அதிமுக ஆதரவு
செங்கோட்டை: செங்கோட்டை நகராட்சியில் ஊழல் நடப்பதாகக் கூறி திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
செங்கோட்டை நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் ரகீம் (திமுக) தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியவுடன் தாமிரபரணி கூட்டு குடிநீர் நகரப் பகுதிகளில் சீரான வினியோகம் செய்யப்படவில்லை. மேலும் பல்வேறு பணிகளில் முறைகேடு நடந்துள்ளது. கவுன்சிலர்களை கலந்து ஆலோசித்து பின்னர் தான் பணிகளை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.
மேலும் மின்சார பொருட்களை ஒரே நபரிடம் வாங்குவதால் அது தரமற்று போய் விடுகிறது. இம்முறை அந்த நிறுவனத்தை மாற்ற வேண்டும். ஆடறுப்பு கட்டிடம் ரூ.20 லட்சத்தில் கட்டுவதை ரூ.10 லட்சத்தில் கட்டி முடிக்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் கல்யாணி, பஞ்ச் பீர், அப்துல் காதர், காங்ிகரஸ் கவுன்சிலர் ஜெகன் ஆகியோர் வலியுறுத்தினர்.
ஆனால் இதற்கு நகராட்சி தலைவர் ரகீம் முடியாது என்று கூறவே மேற்கண்ட கவுன்சிலர்கள் 4 பேரும் இத்திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. இதனை கண்டித்து நாங்கள் வெளிநடப்பு செய்கிறோம் என்று கூறி கூட்ட அரங்கை விட்டு வெளியேறினர்.
ஆனால் அதிமுக கவுன்சிலர்கள் திமுக தலைவருக்கு ஆதரவாக கூட்ட அரங்கினுள்ளேயே இருந்தனர்.
மேலும் தற்போது சென்னை-தென்காசி இயங்கி வரும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வீரவாஞ்சி எக்ஸ்பிரஸ் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்தை வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கூட்டம் தொடங்கியது முதல் முடிவு வரை ஒரே கூச்சலும், குழப்பமுமாக அவை இருந்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications