சென்னை அழைத்து வரப்பட்டார் கிருஷ்ணசாமி
சென்னை: காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, சென்னைக்கு இன்று அழைத்து வரப்பட்டார்.
முதுகுளத்தூர் அருகே ஒரு கும்பல் வழிமறித்து வேல் கம்புகளால் தாக்கியதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி படுகாயமடைந்தார்.
இதையடுத்து அவரை மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. தொடர்ந்து அங்கேயே அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
சற்று உடல் நலம் தேறிய நிலையில், அவரை சென்னைக்குக் கொண்டு வந்து மேல் சிகிச்சை தர அவரது குடும்பத்தினர் விரும்பினர். இதையடுத்து இன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து கிருஷ்ணசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
பின்னர் அங்கிருந்து அவர் பிற்பகல் 12.45 மணிக்கு விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆம்புலன்ஸில் பலத்த பாதுகாப்புடன் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட கிருஷ்ணசாமியுடன் அவரது மகன் விஷ்ணு பிரசாத், மகள் செளம்யா அன்புமணி மற்றும் டாக்டர்கள் குழுவும் வந்தனர்.
அதன் பின்னர் விசேஷமாக வரவழைக்கப்பட்ட இந்தியன் விமானத்தில் கிருஷ்ணசாமி ஏற்றப்பட்டு சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். சென்னை வந்து சேர்ந்ததும் நேராக அப்பல்லோ மருத்துவமனைக்குக் கொண்டு போகப்பட்டார் கிருஷ்ணசாமி.
முன்னதாக மதுரையில் விஷ்ணுபிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், தந்தையின் உடல் நலம் நிலையாக இருப்பதாகவும், அவர் வேகமாக தேறி வருவதாகவும் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications