கடலூர் பட்டாசு விபத்து: பலி 4 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் அருகே கடந்த 29ம் தேதி பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம், சுத்தகுளம் என்ற கிராமத்தில் உள்ள பட்டாசு தயார் செய்யும் தொழிற்சாலையில் கடந்த அக்டோபர் 29ம் தேதி பெரும் தீவிபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் ராயர்(40), வினோத்(17) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
அவர்களில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை ரேணுகா(22) மற்றும் ரேணுகா தேவி(26) ஆகிய இருவரும் இறந்தனர்.
லக்ஷ்மி, பவுனு, உமா, சேகர் ஆகியோர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications