புதுச்சேரியில் கோவில் உண்டியலை உடைத்து திருட்டு
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து ரூ.25,000 பணத்தை சிலர் திருடிச் சென்றுவிட்டனர்.
புதுச்சேரி, கரமணிப்பாக்கம் என்ற இடத்தில் சுந்தர விநாயகர் சிவசுப்ரமணிய கோவில் உள்ளது. நேற்றிரவு இந்த கோவிலின் பூட்டை திறந்து அங்குள்ள உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ. 25,000 பணத்தை யாரோ சில மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
திருடர்கள் கோவில் கதவை உள்புறமாக பூட்டிவிட்டு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டனர்.
இன்று காலை கோவிலை திறக்க வந்த கோவில் நிர்வாகிகள், கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் கதவை திறக்க முடியாததால் , கோவில் ஊழியர்கள் சிலர் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று கோவில் கதவை திறந்தனர்.
கோவில் உள்ளே சென்று பார்த்ததில் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கோவிலுக்குள் உள்ள இன்னொரு சன்னதியான வரதராஜபெருமாள் கோவிலின் உண்டியல் உடைக்க முயன்ற கொள்ளையர்கள் முடியாமல் போனதால் கிடைத்தவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளதாக தெரிகிறது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications