கிருஷ்ணசாமி தாக்குதல் வழக்கு: மேலும் 5 பேர் கைது
ராமநாதபுரம்: தமிழக காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 29ம் தேதி தேவர் ஜெயந்தி விழாவிற்காக முதுகுளத்தூர் அருகே காரில் வரும்போது கீழகண்ணிசேரி என்ற இடத்தில் 50 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கிருஷ்ணசாமியைத் தாக்கியது.
இதில் வேல் கம்பால் குத்தியதில் கிருஷ்ணசாமி படுகாயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் தனிப்படைகளை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே 5 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மேலும் 5 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த தமிழரசு, முனியசாமி, கருப்பையா, ரவி மற்றும் முத்து ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் கீழகண்ணிசேரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் தொடர்பாக இதுவரை 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications