ரயில் பெட்டிகளில் சிதறிய டீசல் - 2 ஊழியர்கள் சஸ்பெண்ட்
விழுப்புரம்: விழுப்புரம் ரயில் நிலையத்தில் டீசல் நிரப்பியபோது, மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகளில் டீசல் தெறித்து விழுந்தது. இதனால் பயணிகள் பீதியடைந்தனர். கவனக்குறைவாக இருந்ததாக 2 ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று விழுப்புரம் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. நள்ளிரவில் வந்த அந்த ரயில் முதலாவது பிளாட்பாரத்தில் நிறுத்தப்பட்டது.
அப்ேபாது என்ஜினில் டீசல் நிரப்பப்பட்டது. டீசல் நிரப்பிய பின்னர் ரயில் கிளம்பியது. அப்போது சற்று வேகமாக ரயில் கிளம்பியதால் அந்த அதிர்வில், டீசல் குழாயிலிருந்து டீசல் சிதறி ரயில் பெட்டிகள் மீது விழுந்து தெறித்தது.
மொத்தம் 8 பெட்டிகளில் டீசல் சிதறியது. டீசல் மழை போல கொட்டியதால் பயணிகள் பீதியடைந்தனர். இதையடுத்து ரயிலை 2வது பிளாட்பாரத்திற்கு கொண்டு சென்றனர்.
டீசல் விழுந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் வெளியே அழைத்து வரப்பட்டனர். அதில் டீசலை நுகர்ந்த சிலர் மயக்கமடைந்திருந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களின் உடைகளும் உடனடியாக மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
பின்னர் பயணிகள் வேறு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். டீசல் சிதறிய 4 பெட்டிகள் மாற்றப்பட்டு வேறு பெட்டிகள் இணைக்கப்பட்டு மங்களூர் எக்ஸ்பிரஸ் பின்னர் கிளம்பிச் சென்றது.
ஒரு என்ஜினுக்கு டீசல் நிரப்பிய பின்னர், அது போன பிறகுதான் அடுத்த ரயிலுக்கான டீசலுடன் ஊழியர்கள் தயாராக வேண்டும். ஆனால் இதில் கவனக்குறைவாக இருந்ததால்தான் இந்த சம்பவம் நடந்ததாக விசாரணையில் தெரிய வந்தது.
இதுதொடர்பாக கந்தவேல், சண்முகம் ஆகிய இரு ரயில்வே ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications