பிரேசில் நாட்டில் வீடுகள் மீது விமானம் விழுந்து 8 பேர் பலி
சாண்டோ பாலோ: பிரேசில் நாட்டில் குட்டி பயணிகள் விமானம் வீடுகள் மீது விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.
பிரேசில் நாட்டின் ரிலி விமான டாக்சி நிறுவனம் குறைந்த பயணிகளை ஏற்றி செல்லும் குட்டி விமானங்களை பயன்படுத்தி வருகிறது.
சாம்போடி டி மார்ட்டி என்ற நகரில் இருந்து கைனிரோவுக்கு புறப்பட்டு சென்ற விமானம், கிளம்பிய சிறிது நேரத்தில் விமான இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது.
இதையறிந்த விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்க முயன்றார். ஆனால் அந்த விமானம் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள வீடுகள் மீது தலைகுப்புற விழுந்து நொறுங்கியது.
இதில் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 8 பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்களில் 2 பெண்களும், ஒரு குழந்தையும் அடங்குவர். இந்த விபத்தில் விமானத்திலிருந்த பலர் படுகாயம் அடைந்தனர்.
விமானம் வீடுகள் மீது விழுந்ததில் 2 வீடுகள் இடிந்தன. அதிலிருந்தவர்களும் படுகாயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications