பாக். அணு ஆயுதங்கள்- யு.எஸ். 'கலவரம்'!
நியூயார்க்: பாகிஸ்தானில் நிலவும் குழப்ப சூழ்நிலையைப் பயன்படுத்தி, தீவிரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்கி விடக் கூடும் என்று அமெரிக்கா அச்சம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் முஷாரப் அவசர நிலையை பிரகடனப்படுத்தியிருப்பது குறித்து இதுவரை அமெரிக்கா தெளிவான கருத்தை வெளியிடவில்லை. முஷாரப்பின் நடவடிக்கை குறித்து அதிருப்தியை மட்டுமே வெளியிட்டுள்ளது. புஷ் இதுவரை ஒரு கருத்தையும் வெளியிடவில்லை.
அதேசமயம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் கையில் அங்குள்ள அணு ஆயுதங்கள், அணு ஆயுதத் தயாரிப்பு தொடர்பான ரகசியங்கள் கை மாறி விடக் கூடும் என்ற கலவரத்தில் அமெரிக்கா உள்ளது.
இதுகுறித்து தெற்காசியாவுக்கான தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் முன்னாள் மூத்த இயக்குநர் ப்ரூஸ் ரீடல் கூறுகையில், பாகிஸ்தானில் தற்போது நிலவும் நிலையைப் பார்த்தால், அவர்களின் அணு ஆயுதங்கள் தீவிரவாதிகள் வசம் சிக்கிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக அல் கொய்தாவினரின் கையில் அவை சிக்கும் பெரும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தார்.
அமெரிக்க செனட் உறுப்பினர் ஜோசப் பிடன் கூறுகையில், முஷாரப் மேற்கொண்டுள்ள நடவடிக்கையைப் பார்த்தால், இதற்கு மேலும் முஷாரப்பை மையமாக வைத்து திட்டமிடுவதை அமெரிக்கா மாற்றிக் கொள்ள வேண்டும். பாகிஸ்தானை மையமாக வைத்து கொள்கையை உருவாக்க வேண்டிய நேரம் அமெரிக்காவுக்கு வந்துள்ளது.
பாகிஸ்தானில் அரசியல் சட்டத்தை முடக்கி வைத்திருக்கும் உத்தரவை முஷாரப் திரும்பப் பெறாவிட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பாதிக்கப்படும் என்பதை அதிபர் புஷ், முஷாரப்புக்கு தெளிவாக சொல்ல வேண்டும்.
அங்கு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ராணுவத்தின் பிடியிலிருந்து நாடு விடுபட வேண்டும். இதற்கு அமெரிக்க அரசு முன் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கிடையே, பாகிஸ்தானுடன் அடுத்த வாரம் நடைபெறுவதாக இருந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை அமெரிக்கா திடீரென ஒத்திவைத்துள்ளது.
இதுகுறித்து பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜெப் மோரல் கூறுகையில், வருடாந்திர அமெரிக்க - பாகிஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டம் நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்தது என்றார்.
முஷாரப்பின் நடவடிக்கையால் அமெரிக்கா அதிருப்தி அடைந்திருப்பதால்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த பேச்சை அமெரிக்கா ஒத்தி வைத்து விட்டதாக கூறப்படுகிறது
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications