முதுகுளத்தூருக்குள் நுழைய டாக்டர் கிருஷ்ணசாமிக்கு கலெக்டர் தடை
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நுழைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தடை விதித்ததால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
கடந்த 29ம் தேதி தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்ள வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியை முதுகுளத்தூர் அருகே மர்ம கும்பல் சிலர் தாக்கி வேல் கம்பால் குத்தி விட்டனர்.
இந்த சம்பவத்தின் எதிரொலியாக முதுகுளத்தூரில் நடைபெற்ற கலவரத்தில் அரசு பள்ளி தலைமையாசிரியர் வின்சென்ட் சாலமன் என்பவர் பரிதாபமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜாதிக் கலவரம் ஏற்பட வாய்ப்பு இருந்ததால் அரசு உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதிலும் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் முதுகுளத்தூருக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வர உள்ளார். அவர் வந்தால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்பதால் கிருஷ்ணசாமி முதுகுளத்தூருக்குள் நுழைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார்.
இதனால் அவர் வேறு வழியாக முதுகுளத்தூருக்குள் நுழையலாம் என்பதால் அம் மாவட்ட எல்லை முழுவதிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications