பி.இ: நுழைவுத் தேர்வு ரத்தானதால் கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பலன்
சென்னை: பொறியியல், மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
கடந்த எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்டது நுழைவுத் தேர்வு முறை. ஆனால் இந்த நுழைவுத் தேர்வால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக சமீப காலமாக சர்ச்சை எழுந்தது. நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து திமுக அரசு நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. இதன் காரணமாக கிராமப்புற மாணவர்கள் பலன் அடைந்துள்ளார்களா?. அடைந்துள்ளனர் என்று கூறுகிறார் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் விஸ்வநாதன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்த கிராமப்புற மாணவர்களின் எண்ணிக்கை பத்து சதவீதம் அதிகம். நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதே இதற்குக் காரணம் என்றார் அவர்.
தொடர்ந்து அவர் கூறுகையில், செல்போன்களுக்குத் தடை விதித்திருப்பதால் பல பலன்கள் ஏற்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது நேரத்தை வீணடிப்பதில்லை. சைபர் கிரைம்' பிரச்னை இல்லை. மாணவர்கள் நுாலகங்களிலும், கம்ப்யூட்டர் ஆய்வுக் கூடங்களிலும் செலவிடுவதால் கல்வித்தரம் உயர்ந்துள்ளது.
இதேபோல, கலை, அறிவியல் கல்லூரிகளிலும் செல்போன்களுக்குத் தடை கொண்டு வந்தால் நன்றாக இருக்கும். மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு நாம் இதை செய்ய வேண்டும்.
அண்ணா பல்கலைக் கழகத்திலிருந்து 65 பேராசிரியர்களும், 20 மாணவர்களும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். இவை தற்போது தான் அதிக பலன்களை தர துவங்கியுள்ளன. 20 ஆண்டுகளில் இதன் முழு பயனும் தெரிய வரும்.
கோவை, திருச்சி, திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழகங்களில் பாடத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்றார் விஸ்வநாதன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications