புதுச்சேரியைச் சேர்ந்த 3 பேர் பிரான்ஸ் தீவிபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பிரான்ஸில் நடந்த தீவிபத்தில் பலியானார்கள்.
புதுச்சேரி மூலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவரது மனைவி மோனிகா. கடந்த 8ம் தேதி தீவிபத்து ஒன்றில் இவர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களுடன் ஜெய்சங்கரின் மைத்துனி கால்டி டிரினிட்டோ மற்றும் மகள் ஆகியோரும் சிக்கி படுகாயமடைந்தனர்.
இந்த விபத்தில் மோனிகா, அவரது மகள் மற்றும் கால்டி டிரினிட்டோ ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெய்சங்கர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெய்சங்கர் பிரான்ஸில் ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வருகிறார். அந்த ஹோட்டலில்தான் அனைவரும் தங்கியிருந்தனர். அப்போதுதான் தீவிபத்து ஏற்பட்டு அதில் சிக்கிக் கொண்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications