பஸ் மோதி 2 ரயில்வே ஊழியர்கள் பலி
திருப்பதி: ரோட்டை கடக்க முயன்ற இருவர் மீது தனியார் பேருந்து மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திருப்பதி-சென்னை நெடுஞ்சாலையில் தென்னக ரயில்வேக்கு சொந்தமான ரயில் பெட்டிகள் பழுது நீக்கும் நிலையம் (சி.ஆர்.எஸ்) உள்ளது. இங்கு வேலை பார்ப்பவர்களான நரசிம்குலு(55) மற்றும் காயத்ரி(50) ஆகிய இருவரும் நெடுஞ்சாலையின் ரோட்டை கடக்க முயன்றனர்.
அப்போது அரக்கோணத்திலிருந்து வந்த தனியார் பேருந்து ரோட்டை கடக்க முயன்றவர்கள் மீது பலமாக மோதியதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் ரயில்வே ஊழியர்கள் மீது மோதிய தனியார் பஸ் டிரைவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பதி-சென்னை சாலையில் சி.ஆர்.எஸ் ஊழியர்கள் சாலை மறியல் செய்ததால் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications