'பரிகாரம்' தேட நாய்க்கு தாலி கட்டிய வாலிபர்!
மானாமதுரை: தனக்கு ஏற்பட்ட தோஷம் விலக பரிகாரத்திற்காக நாய்க்கு தாலி கட்டி அதை வாலிபர் ஒருவர் மனைவியாக்கிக் கொண்டார்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள விலாக்குளத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார்(33). கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் உல்லாசத்தின் உச்சியில் இருந்த 2 நாய்களை அடித்துக் கொன்று மரத்தில் தொங்க விட்டுள்ளார். அதன் பின்னர் செல்வகுமாருக்கு இரு கை, கால்கள் செயலற்று போய் காதும் கேட்காமல் போய்விட்டதாம்.
தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கான காரணத்தை ஒரு ஜோதிடரிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், நீ சிறுவனாக இருந்த போது செய்த விளையாட்டுத்தனம் தான் உன்னை இந்தளவு ஆக்கிவிட்டது. இது இறந்த நாய்களின் சாபம் தான் எனவும், அதற்கு பரிகாரமாக ஏதாவது ஒரு நாயை நீ திருமணம் செய்து மனைவியாக்கி கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதன்படி தனது வீட்டின் அருகில் உள்ள பெண் நாயை அன்புடன் தினந்தோறும் உபசரித்து அதை செல்வி என்று செல்ல பெயர் வைத்து அன்பு காட்டியுள்ளார். ஜோதிடர் சொல்லியபடி செல்வியை(நாயின் பெயர்)திருமணம் செய்ய முடிவெடுத்தார் செல்வகுமார்.
அதன்படி செல்விக்கும், செல்வகுமாருக்கு திருமண ஏற்பாடு நடந்தது. செல்விக்கு சேலை கட்டி ஊர்வலமாக அப்பகுதியில் உள்ள கணபதி கோவிலுக்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர் செல்வியின் கழுத்தில் செல்வகுமார் தாலி கட்டி இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். இந்த திருமணத்திற்கு பின்னர் அப்பகுதி மக்களுக்கு தடபுடலாக அறுசுவை விருந்து படைக்கப்பட்டது. மணமகள் செல்விக்கு பன் கொடுக்கப்பட்டது.
நான் செய்த பாவத்துக்காக பரிகாரம் செய்துள்ளேன். எனது மனைவி செல்வியை என் வாழ்நாள் வரை பத்திரமாக பார்த்துக் கொள்வேன் என்று செல்வகுமார் கூறியது தான் அனைவரையும் அதிரச் செய்தது.
நாயை வாலிபர் திருமணம் செய்த சம்பவம் மானாமதுரை முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications