கள்ளக்காதல்: மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்!
சென்னை: தங்கையின் கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த மனைவியின் கழுத்தை அறுத்துக் கொடூரமாக கொன்ற கணவனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, வியாசர்பாடி பி.வி.காலனியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (35). இவருக்கு திருமணமாகி ஈஸ்வரி (29) என்ற மனைவியும், பிரபாகரன்(8) என்ற மகனும், பிருந்தா (7) என்ற மகளும் இருக்கிறார்கள்.
மகேந்திரன் பர்மா பஜார் பகுதியில் புரோக்கர் வேலை பார்த்து வருகிறார். குடிப்பழக்கம் கொண்ட மகேந்திரன் தினமும் குடித்துவிட்டு மனைவி ஈஸ்வரியை வந்து அடித்து உதைப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதனால் வாழ்க்கை வெறுத்துப் போயிருந்த ஈஸ்வரிக்கும், மகேந்திரனின் தங்கை கணவர் ஐயப்பனுக்கும் இடையே, கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. மகேந்திரன் இல்லாத நேரத்தில் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த விஷயம் ஒருநாள் மகேந்திரனுக்கு தெரிந்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் ஈஸ்வரியோ அதைக் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து ஐயப்பனுடன் கள்ளக் காதலை வளர்த்து வந்தார்.
இதனால் மீண்டும் மகேந்திரன் ஈஸ்வரியை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் வெறுத்துப்போன ஈஸ்வரி, ஐயப்பனுடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஓடி விட்டார்.
இதுகுறித்து மகேந்திரன் போலீசில் புகார் தெரிவித்ததையடுத்து அவர்கள் கள்ளக்காதல் ஜோடியை கண்டுபிடித்து அறிவுரைகள் கூறி ஈஸ்வரியை அவரது கணவர் மகேந்திரனுடன் அனுப்பி வைத்தனர்.
திரும்பி வந்தும் கூட ஈஸ்வரி - ஐயப்பன் உறவு தொடர்ந்தது. இதனால் மனம் வெறுத்துப்போன மகேந்திரன் நேற்றிரவு மனைவி ஈஸ்வரியுடன் சந்தோஷமாக இருப்பது போல் நடித்து அவருக்கு மயக்க மருந்து கொடுத்து தூங்கச் செய்துள்ளார்.
பின்னர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த ஈஸ்வரியை இன்று அதிகாலையில் கழுத்தை அறுத்து கொறு விட்டு தப்பி விட்டார். அதே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஈஸ்வரியின் சகோதரிகள் அதிகாலையில் எழுந்து பார்த்தபோது ஈஸ்வரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதைப் பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மகேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஐயப்பன் தலைமறைவாகி விட்டார். அவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications