சென்னை மருத்துவமனையில் வெடிகுண்டு பீதி!
சென்னை: சென்னை அண்ணா நகரில் உள்ள அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு போல இருந்த தீபாவளி வெடியால் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணாநகரில், அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் உள்ளது. தினசரி ஏராளமான நோயாளிகள் இங்கு வந்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று மாலை, மருத்துவமனையில் உள்ள பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பகுதியில், ஒரு பை கிடந்தது. கேட்பாரற்றுக் கிடந்த அந்தப் பையால் பரபரப்பு ஏற்பட்டது. பைக்குள் மஞ்சள் நிறத்தில் பெரிய உருண்டையான பொருளும் இருந்தது.
இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து பையைக் கைப்பற்றி சோதனை போட்டனர். அப்போது பையில் இருந்தது நாட்டு வெடிகுண்டு போலக் காணப்பட்டது.
இதையடுத்து அதை, தாம்பரத்தை அடுத்த ஊனமாஞ்சேரிக்குப் போலீஸார் கொண்டு சென்று வெடிக்கச் செய்தனர். அப்போது அது வானில் போய் வெடித்து பூப் போல கீழே வந்து விழுந்தது. இதையடுத்து அது வெடிகுண்டு இல்லை என்றும் நாட்டு வெடிகுண்டு உருவத்தில் தயாரிக்கப்பட்ட தீபாவளி வெடி என்றும் போலீஸார் கண்டுபிடித்னர்.
இது எப்படி மருத்துவமனை வளாகத்தில் வந்தது என்று தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications