சென்னையில் வீட்டை உடைத்து ரூ.20 லட்சம் நகை கொள்ளை
சென்னை: சென்னையை அடுத்துள்ள புறநகர் பகுதயான சோழிங்கநல்லூரில் இன்ஜினியர் ஒருவரின் வீட்டு கதவை உடைத்து ரூ. 20 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
சோழிங்கநல்லூரைச் சேர்ந்தவர் கட்டட இன்ஜினியர் பால்ராஜ். இவரது மனைவி சுகந்தி. பால்ராஜ் அப்பகுதியில் காண்டிராக்ட் எடுத்து நிறைய கட்டடங்களை கட்டி வருகிறார். அது தவிர தனது மகள் பெயரில் அனிதா பார்க் ரெஸ்டாரென்ட் என்ற ஹோட்டல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
பால்ராஜின் மகளுக்குஉடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பால்ராஜ் மற்றும் சுகந்தி இருவரும் மருத்துவமனையிலேயே தங்கிவிட்டனர்.
இந்நிலையில் இன்று காலை வீட்டு வேலைக்காரப் பெண் வேலைக்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டது கண்டு அதிர்ச்சியடைந்து பால்ராஜூக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.
விரைந்து வந்த பால்ராஜ் வீட்டிற்குள் சென்று பார்த்ததில், பீரோவில் வைக்கப்பட்டிருந்து 300 பவுன் நகைகள் மற்றும் ரூ.20,000 பணம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்து தெரியவந்தது. இது குறித்து பால்ராஜ் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
துணை போலீஸ் கமிஷ்னர் சேஷாயி தலைமையில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.












Click it and Unblock the Notifications