புதுச்சேரி சிறையில் கைதிகள் தொடர் உண்ணாவிரதம்
புதுச்சேரி: சிறைக் கண்காணிப்பாளரை மாற்றக் கோரி புதுச்சேரி மத்திய சிறையில் கைதிகள் 2வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கடந்த 2005ம் ஆண்டு புதுச்சேரி சிறை வளாகத்திற்குள் விஷச் சாராயத்தை அருந்தி 3 கைதிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. கமிஷன் விசாரணையின்போது, 16 கைதிகளை சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் சித்திரவதை செய்ததாக கைதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து கமிஷன் பரிந்துரைப்படி சிறைக் கண்காணிப்பாளர் ஜெயகாந்தன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் சமீபத்தில் ஜெயகாந்தன் மீண்டும் பணியில் சேர்ந்தார்.
இதையடுத்து கைதிகளைப் பழி வாங்கும் வகையில் ஜெயகாந்தன் செயல்படுவதாக கூறி புதுவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 60க்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
நேற்று 2வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
இதற்கிடையில் சிறை கைதிகளுக்கு ஆதரவாக மத்திய சிறைக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications