மருமகள் வாயில் 'ஆசிட்' ஊற்றிய மாமனார், மாமியார்!
டெல்லி: வரதட்சணை கொடுமையின் உச்சகட்டமாக, டெல்லியைச் சேர்ந்த பெண்ணை கட்டாயப்படுத்தி ஆசிட் குடிக்க வைத்து கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தப் பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
டெல்லியைச் சேர்ந்தவர் ராதிகா (28). கடந்த 7 வருடங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் ஆனது.
திருமணம் ஆகி கணவர் வீட்டிற்கு சென்ற நாளிலிருந்து ராதிகா வரதட்சணை கொடுமைக்கு ஆளானார். தினந்தோறும் மாமியார், நாத்தனார்களின் சித்ரவதையை சந்தித்து வந்தார் ராதிகா.
இந்நிலையில் நேற்று ராதிகாவின் கணவரின் உறவினர்கள் கூடுதல் வரதட்சணை கேட்டு ராதிகாவை வழக்கம் போல கொடுமைப்படுத்தியுள்ளனர். பின்னர் டாய்லெட் கழுவ பயன்படுத்தப்படும் அமிலத்தைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர்.
ஆனால் ராதிகா மறுத்துள்ளார். இருந்தாலும் விடாத அவர்கள் ராதிகாவை மிரட்டி குடிக்க செய்து விட்டனர். இதனால் அலறித் துடித்த ராதிகாவை அக்கம் பக்கத்தினர் அப்பல்லோ மருத்துவனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் ராதிகா சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, தான் தற்செயலாகத்தான் அமிலத்தைக் குடித்து விட்டதாக ராதிகா கூறியுள்ளார். ஆனால் அவரது மாமனார் வீட்டார்தான் இப்படிச் செய்து விட்டனர் என ராதிகாவின் பெற்றோர் கூறுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications