ஏட்டய்யாக்களின் சைக்கிள்களை மட்டும் லவட்டிய நூதன திருடன்!
திருச்சி: போலீஸாரின் சைக்கிள்களை மட்டும் குறி வைத்து கடந்த 44 ஆண்டுகளாக திருடி வந்த நூதன திருடனை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த நூதனத் திருடனின் தந்தை இன்ஸ்பெக்டராக இருந்தவர் என்பதுதான் இதில் விசேஷம்.
மதுரை அருகே உள்ள சோழவந்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் கபாலீஸ்வரன். 59 வயதாகும் இவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் மோட்டார் சைக்கிளைத் திருடியபோது கைது செய்யப்பட்டார்.
கை எடுத்துக் கும்பிடும் அளவுக்கு தோற்றத்தில் இருந்த கபாலீஸ்வரனிடம், ஏன் பெரீவரே, இந்த வயதில் போய் இப்படித் திருடலாமா என்று போலீஸார் கேட்டுள்ளனர். அதற்கு கபாலீஸ்வரன் கூறிய பதிலைக் கேட்ட போலீஸாருக்கு மூச்சடைப்பது போல ஆகி விட்டதாம்.
மிஸ்டர். கபாலியின் தொழிலே திருட்டுதானாம். அதிலும் போலீஸாரின் சைக்கிள்களை மட்டுமே குறி வைத்துத் திருடுவாராம். திருச்சியில்தான் தனது திருட்டுத் தொழிலை கடந்த 1976ம் ஆண்டு அடிக்கல் நாட்டி தொடங்கியுள்ளார். அன்று ஆரம்பித்து இன்று வரை விடாமல் தொடர்ந்து திருடி வருகிறாராம்.
கிட்டத்தட்ட 221 சைக்கிள்களை திருடி புதிய சாதனை ஒன்றையும் வைத்துள்ளார் கபாலி. அது 31 ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்ட சாதனையாம். இதில் பாதிக்கும் மேற்பட்ட சைக்கிள்கள் காவல்துறையினரின் சைக்கிள்களாம்.
அந்தக் காலத்தில் போலீஸாரின் முக்கிய வாகனமே சைக்கிள்கள்தான். அதில்தான் ரோந்துப் பணியிலும், இரவு நேர ரோந்திலும், திருடர்களைப் பிடிக்கவும் பயன்படுத்துவார்கள். எனவே அந்தக் காலத்தில் ஒரு போலீஸ்காரருக்கு சைக்கிள் இல்லாவிட்டால் கை இல்லாதது போல. எனவே இவர் திருடிய சைக்கிள்களால் பல போலீஸார் அந்தக் காலத்தில் பெரும் பாதிப்படைந்துள்ளனராம்.
15 வயதிலேயே திருடனாகி விட்டதால் இவரது தந்தை வீட்டை விட்டு விரட்டி விட்டாராம். இவரது தந்தை ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதுதான் விசேஷம். எனவே கடுப்பான கபாலிக்கு போலீஸ்காரர்களைப் பிடிக்காமல் போய் விட்டது. இதனால்தான் போலீஸ்காரர்களின் சைக்கிள்களை குறி வைத்து சுட்டுள்ளார்.
பிறகு போனால் போகிறதென்று பிறருடைய சைக்கிள்களையும், இலகு ரக மொபட்களையும் சுட ஆரம்பித்தாராம்.
மதுரை, திருச்சி, திண்டுக்கல் என இவர் கால் பதியாத இடமே இல்லையாம். இவருக்கே எங்கெல்லாம் திருடினோம் என்பது சரியாக நினைவில் இல்லையாம்.
இந்த நூதனத் திருடனை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications