இந்தியாவின் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி
சென்னை: முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜினை முழுமையாக பரிசோதித்து இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தின் தென்கோடியில் உள்ள மகேந்திரகிரியில் உள்ள சோதனை மையத்தில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளின் மேல் நிலையில் கிரையோஜெனிக் இயந்திரங்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மகேந்திரகிரி திரவ எரிபொருள் சோதனை மையத்தில் முழுமையான 720 விநாடிகளுக்கு கிரையோஜெனிக் இயந்திரத்தின் கிரவுண்ட் டெஸ்ட் நடத்தப்பட்டது. இந்த சோதனை எந்தவித பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாக முடிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்த சோதனையைத் தொடர்ந்து ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுக்களில் பயன்படுத்தக் கூடிய தகுதியை இந்தியாவின் சுய சார்பு கிரையோஜெனிக் இயந்திரங்கள் பெற்றுள்ளன.
அடுத்த ஆண்டு இந்தியா செலுத்தவுள்ள ஜிஎஸ்எல்வி-டி3 ராக்கெட்டில் இந்தியாவின் இந்த கிரையோஜெனிக் இயந்திரம் பயன்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி 480 விநாடிகளுக்கான கிரவுண்ட் டெஸ்ட் வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்பது நினைவிருக்கலாம். தற்போது நடந்துள்ளது முழு அளவிலான (720 விநாடிகள்) சோதனையாகும்.
மகேந்திரகிரி சோதனை இஸ்ரோவின் வரலாற்றிலும், இந்திய விண்வெளியியல் வரலாற்றிலும் புதிய மைல் கல் ஆகும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications