உதகை, கொடைக்கானலில் உறைபனி
ஊட்டி: ஊட்டி மற்றும் கொடைக்கானலில் உறைபனி கொட்டுவதால் மக்கள் கடும் குளிரில் நடுங்கிக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை சற்று ஓய்ந்துள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது. இரவெல்லாம் பனி கொட்டுகிறது.
மழைக்காலம் இன்னும் முடியாத நிலையில் கடும் குளிர் வாட்டி எடுக்க ஆரம்பித்துள்ளதால் மக்கள் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக ஊட்டி, கொடைக்கானலில் கடும் குளிர் நிலவுகிறது. இரு மலை வாசஸ்தலங்களிலும் உறைபனியும் கொட்டுகிறது.
ஊட்டியில் பகல் நேர வெப்ப நிலையாக 20 டிகிரி உள்ளது. ஆனால் இரவிலோ இது 8 டிகிரியாக குறைந்து விடுகிறது. இதன் காரணமாக உறைபனி கொட்டுகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளை நிறத்தில் பனி மயமாக காணப்படுகிறது.
காலை விடிந்து வெகு நேரமாகியும் பனி விலகாமல் உள்ளதால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
அவலாஞ்சி, தலகுண்டா உள்ளிட்ட ஊட்டியின் பல முக்கிய இடங்களிலும் உறைபனி நிலவுகிறது.
இதேபோல கொடைக்கானலிலும் கடும் குளிர் அடிக்கிறது. ஸ்வெட்டர்கள், தலையில் குரங்கு குல்லாய் இல்லாமல், யாரும் வெளியில் நடமாட முடியவில்லை.












Click it and Unblock the Notifications