அனைத்து வீரர்களையும் கெளரவிக்கும் தமிழக அரசு- அமைச்சர்
திருநெல்வேலி: தமிழக அரசு மட்டும் தான் அனைத்து விளையாட்டு வீரர்களையும் கெளரவித்து வருகிறது என்று தமிழக விளையாட்டு மற்றும் சுற்றுப்புற சூழல் அமைச்சர் மைதீன்கான் கூறியுள்ளார்.
பாளையங்கோட்டையில் பொது சுகாதாரத் துறை அலுவலர் சங்கத்தின் மாநில பிரதிநிதித்துவ பேரவை விழாவில் அமைச்சர் மைதீன்கான் பேசியதாவது,
இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் தவிர பிற விளையாட்டு வீரர்கள் கெளரவிக்கப்படுவதில்லை என்ற புகார் இருந்து வருகிறது. தமிழகத்தில் மட்டுமே அனைத்து விளையாட்டு வீரர்களும் கெளரவிக்கப்படுகின்றனர்.
தமிழக அரசு கிரிக்கெட், செஸ் மற்றும் கபடி உட்பட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் சமீபத்தில் பரிசு வழங்கியது. இதனையறிந்த கர்நாடக அரசு உடனடியாக தமிழக அரசை பின்பற்றி அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பரிசு வழங்கியது.
தமிழகத்தில் கடந்த ஆட்சியின்போது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது டெஸ்மா, எஸ்மா சட்டங்கள் பாய்ந்தன. இதனால் பலர் வேலை இழந்து போகும் அபாயம் ஏற்பட்டது.
அவர்களின் சலுகைகள் பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் அவர்களின் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த நன்றி கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தினால் மட்டும் போதும்.
சேது கால்வாய் திட்டத்தை கொண்டு வருவதன் மூலம் மாநிலங்களில் தமிழகம் பொருளாதார ரீதியாக முதல் இடத்தில் வளர்ச்சியடையும். இதன் முலம் தமிழக அனைத்து மக்களுக்கும் பயன் உண்டாகும். இதனை நிறைவேற்றிட நாம் அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications