மதுரையில் ரூ. 1 லட்சம் கேட்டு சிறுவன் கடத்தல்-ஆட்டோ டிரைவர்களுக்கு வலை
மதுரை: மதுரையில் ரூ. 1 லட்சம் கேட்டு சிறுவன் கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டான். அவனைக் கடத்தியது ஆட்டோ டிரைவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
மதுரையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் கோபிநாதன். இவரது மகன் ஸ்ரீதரன் (15)9ம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று வீட்டு முன் ஸ்ரீதரன் நின்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் வந்த 3 பேர் அவரை ஆட்டோவில் இழுத்துப் போட்டுக் கொண்டு கடத்திச் சென்றனர்.
இதையடுத்து கோபிநாதன் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதற்கிடையில் கோபிநாதனின் வீட்டை தொலைபேசியில் தொடர்பு கொண்ட கடத்தல்காரர்கள், உன் மகனை விடுவிக்க வேண்டுமானால் ரூ. 1 லட்சம் தர வேண்டும்.
பணத்தை வண்டியூர் கண்மாய் பகுதிக்கு உடனே கொண்டு வா. இதுபற்றி போலீசுக்கு தெரிவித்தாலோ அல்லது பணம் தராவிட்டாலோ உன் மகனை உயிருடன் பார்க்க முடியாது என்று மிரட்டிவிட்டு போனை துண்டித்து விட்டனர்.
இந்தத் தகவலையும் கோபிநாதன் போலீசாரிடம் தெரிவித்தார்.
இதையடுத்து பணத்துடன் கோவிநாதனை வண்டியூர் பகுதிக்கு அனுப்பிய போலீசார் உதவி கமிஷனர் குமாரவேலு, தெப்பக்குளம் இன்ஸ்பெக்டர் சண்முகநாதன் தலைமையில் அந்தப் பகுதியை ரகசியமாக கண்காணித்தனர்.
பணத்தை வாங்க வந்த கும்பல் அங்கு போலீசார் பதுங்கியிருப்பதை எப்படியோ உணர்ந்து கொண்டு கடத்தப்பட்ட ஸ்ரீதரனை விட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.
இந்தக் கும்பலைப் பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். ஆட்டோ டிரைவர்களிடம் விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.
அப்போது தெப்பகுளம் பகுதியில் 3 ஆட்டோ டிரைவர்கள் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இந்தக் கும்பல் கடத்தலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications