28 டன் கடத்தல் அரிசு பறிமுதல்-கேரளாவுக்கு கடத்தல்
பொள்ளாச்சி: கேரளாவுக்கு லாரிகளில் கடத்தப்பட்ட 28 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல், மதுரையிலிருந்து பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு லாரிகளில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.
நேற்று பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் கோலார்பட்டியில் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் முத்தரசு, சிவில் சப்ளைஸ் தாசில்தார் முத்துராமலிங்கம் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திண்டுக்கல்லில் இருந்து வந்த 2 லாரிகளை அதிகாரிகள் வழி மறித்தனர். ஆனால் லாரிகளை டிரைவர்கள் நிறுத்தாமல் ரிவர்ஸ் எடுத்துக் கொண்டு வந்த வழியே வேகமாகத் திரும்பினர்.
அந்த லாரிகளை அதிகாரிகளும் ஜீப்பில் விரட்டினர். சுமார் 20 கி.மீ. தூரம் விரட்டிச் சென்று மடத்துக்குளம் அருகே லாரிகளை மடக்கினர்.
அந்த லாரிகளை சோதனையிட்ட போது மொத்தம் 28 டன் ரேஷன் அரிசி இருந்தது. அவை கேரளாவுக்கு செல்ல இருந்தவை.
இதையடுத்து லாரி டிரைவர்களான கிருஷ்ணமூர்த்தி, சதீஸ் இருவரையும் கைது செய்தனர்.
அரிசி தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications