திருப்பதியில் ரூ.1 கோடி காணிக்கை செலுத்திய வெளிநாட்டு பெண்
Subscribe to Oneindia Tamil

திருமலை வெங்கடாஜலபதி திருக்கோவிலுக்கு வந்த அந்த விதவைப் பெண் தேவஸ்தான அதிகாரிகளை சந்தித்து ரூ.1 கோடி மதிப்புள்ள செக்கை கொடுத்தார்.
கடந்த வருடம் திருப்பதி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த இவர், தேவஸ்தான அதிகாரிகளை சந்தித்து தனக்கு சொந்தமான ரூ.10 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நான் கோவிலுக்கு தானமாக தருகிறேன். எனது கணவர் நினைவு தினத்தன்று திருமலையில் திருப்பாவாடை சேவை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந் நிலையில் இந்த வருடம் தரிசனம் செய்யவந்த அவர் முதற்கட்டமாக ரூ.1 கோடியை கொடுத்துள்ளார்.
அந்தப் பெண்ணின் விவரம் குறித்து தெரிவிக்க தேவஸ்தான அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.












Click it and Unblock the Notifications