மருத்துவ மாணவர்களுக்காக அதிமுக போராட்டம்: ஜெ.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்.பி.பி.எஸ். படிப்புக் காலத்தை தற்போது உள்ள ஐந்தரை ஆண்டுகள் என்பதிலிருந்து ஆறரை ஆண்டுகளாக உயர்த்த மத்திய அரசு முயன்று வருகிறது. இது ஏழை மாணவர்களையும், பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களையும் கடுமையாக பாதிக்கும்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலத்தில் உள்ள 15 அரசு மருத்துவக் கல்லூரிகள் முன்பு 27ம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
சென்னை, மதுரை, நெல்லை, கோவை, திருச்சி, தஞ்சாவூர், செங்கல்பட்டு, தேனி, சேலம், கன்னியாகுமரி, பெருந்துரை, தூத்துக்குடி, வேலூர் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் முன்பு நடத்தப்படும் போராட்டத்தில் அதிமுக முன்னணித் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்தப் போராட்டத்தில் அதிமுகவினருடன், மருத்துவக் கல்லூரி மாணவர்கள், ஹவுஸ் சர்ஜன்கள், பொது மக்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றுப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
மத்திய அரசு தற்போது எடுத்துள்ள ஆறரை ஆண்டு கால படிப்பு என்ற புதிய முடிவால், மேல் படிப்பையெல்லாம் முடித்து முழுமையான மருத்துவராக ஒரு மாணவர் உருவாக வேண்டுமானால் அவருக்கு வயது முப்பதைக் கடந்து விடும்.
ஆனால் அதேசமயம், பொறியியல் படிப்பைப் படிக்கும் மாணவர்கள் 24 அல்லது 25 வயதுக்குள் படிப்பை முடித்து மாதம் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை ஊதியம் பெறும் நிலைக்கு உயர்ந்து விடுவார்கள்.
இதன் காரணமாகவே மருத்துவக் கல்லூரி மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் படிப்புக் காலத்தை உயர்த்துவதை கடுமையாக எதிர்க்கிறார்கள். தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் என்னாகுமோ என்ற பயத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் வேதனையுடன் உள்ளனர்.
மாணவர்களின் எதிர்காலத்தை குறிப்பாக பிற்பட்ட மற்றும் நலிவடைந்த சமுதாயத்தைச் சேரந்த மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும் வகையில் மத்திய அரசின் நடவடிக்கைகள் உள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் மருத்துவக் கல்லூரிகளில் இந்த மாணவர்கள் சேர முன்வர மாட்டார்கள். பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே சேரும் நிலை உருவாகும்.
கட்டாய ஊரகச் சேவை என்பதை, படிப்பை முடித்தவுடன் மாணவர்களை அரசு டாக்டர்களாக நியமிக்க மத்திய அரசு முன்வந்தால் அதைச் செய்ய மாணவர்கள் தயக்கம் காட்ட மாட்டார்கள். விருப்பத்துடன் ஊரகச் சேவையை செய்ய அவர்கள் முன்வருவார்கள்.
எனவே கட்டாய ஊரகச் சேவை என்ற திட்டத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications