சுகரை கட்டுப்படுத்தும் கோவக்காய்: ஆய்வு
சென்னை: அணில், கிளி போன்றவை விரும்பி சாப்பிடும் கோவக்காயை நாம் சாப்பிட்டால், சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த முடியுமாம். ஆய்வு ஒன்றில் இது தெரிய வந்துள்ளது.
கொடியாக படர்ந்து வளரும் காய் வகைகளில் ஒன்று கோவக்காய். அணில்களும், கிளிகளும் விரும்பிச் சாப்பிடும் பழம் கோவப்பழம். ஆனால் இந்த கோவக்காயை நாம் சாப்பிட்டால், சர்க்கரை வியாதியைக் குறைக்க முடியுமாம், கட்டுப்படுத்த முடியுமாம். புதிய ஆய்வு ஒன்றில் இது தெரிய வந்துள்ளது.
முன்பெல்லாம் சர்க்கரை வியாதி என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே மரும் வியாதியாக கருதப்பட்டு வந்தது. ஆனால் இப்போது யாருக்கு வேண்டுமானாலும் சர்க்கரை வியாதி வருகிறது. எனக்கு சுகர் இருக்கிறது என்பதை 'சந்தோஷமாக' கூறும் அளவுக்கு நிலைமை போய் விட்டது.
சர்க்கரை வியாதி 2 ரகமாக உள்ளது. முதல் ரக வியாதி, யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். இதை இன்சுலின் போட்டு கட்டுப்படுத்த முடியும். 2வது ரக வியாதி, வயதானவர்களுக்கு மட்டுமே வரும். இதை மாத்திரைகளால் கட்டுக்குள் வைக்க முடியும். உடற்பயிற்சியை தவறாமல் செய்து வந்தால் இதை நார்மல் நிலையில் வைக்க முடியும்.
சர்க்கரை வியாதியை குணப்படுத்த முடியாது. ஆனால் கட்டுப்படுத்த முடியும். ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருந்தால் பிரச்சினை இல்லை. இல்லாமல் போனால் மகா ஆபத்துதான்.
சர்க்கரை வியாதி உடையவர்கள் கசப்பான காயான பாகற்காய், வேப்பிலைச்சாறு ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட்டு வர வேண்டும் என்று கூறுகிறார்கள். இது இதுவரை நிருபீக்கப்படவில்லை. ஆனால் கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை குறைகிறது என்பது ஆய்வுப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த மக்கள் சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆய்வுக் குழு மருத்துவர்கள் கோவக்காயை பொடியாக்கி, சாப்பிடும் முன், சர்க்கரை அளவு 200-க்கும் குறைவாக உள்ள 30 புதிய சர்க்கரை நோயாளிகளுக்கு தினமும் ஒரு கிராம் கொடுத்து வந்தனர்.
அந்த ஒரு கிராம் பொடி, 15 கிராம் கோவக்காயை பச்சையாக சாப்பிடுவதற்கு சமமாம். இவ்வாறு 3 மாதம் நோயாளிகள் சாப்பிட்டனர். அதன் பிறகு அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பரிசோதித்ததில் சர்க்கரையின் அளவு மிகவும் குறைந்து இருந்ததைக் கண்டுபிடித்தனர். தினமும் 50 கிராம் சமைத்த கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்றும் அந்த ஆய்வுக் குழு தெரிவித்துள்ளது.
2வது ரக சர்க்கரை நோயாளிகள் தினமும் கோவக்காயை சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். அனைத்துக் கடைகளிலும் மிக எளிதாகக் குறைந்த விலையில் கிடைக்கும் கோவக்காய் நார்ச்சத்து நிரம்பியது. அதை சமைத்தும் பச்சையாகவும் சாப்பிடலாம்.
அணில்கள் கொறிக்கும் கோவக்காயை, நாமும் இனி சாப்பிடுவோமே!
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications