ஆஸி. தேர்தலில் ஹோவர்ட் தோல்வி உறுதி: எக்சிட் போல்

Subscribe to Oneindia Tamil

John howard

சிட்னி: ஆஸ்திரேலிய தேர்தலில் பிரதமர் ஜான் ஹோவர்ட் பெரும் தோல்வியை சந்திப்பார் என்று எக்சிட் போல் கருத்துக் கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த 11 வருடமாக ஜான் ஹோவர்ட் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியே ஆட்சியில் இருந்து வருகிறது. சமீபகாலமாக ஹோவர்ட்டுக்கு ஆஸ்திரேலியாவில் கடும் அதிருப்தி கிளம்பியது. அவரது பல்வேறு கொள்கைகள், செயல்பாடுகள் ஆஸ்திரேலிய மக்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

ஈராக் விவகாரம், இனவெறியைத் தூண்டும் வகையிலான ஹோவர்ட் அரசின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றில் ஹோவர்ட்டுக்கு கடும் எதிர்ப்புகளும், அதிருப்தியும் கிளம்பின. இதனால் ஹோவர்ட் பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியை சந்திப்பார் என பல்வேறு கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. மேலும் அவரது சொந்தத் தொகுதியிலேயே அவர் தோல்வியைச் சந்திப்பார் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவில் தேர்தல் வாக்குப் பதிவு தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாகாணங்களில் வாக்குப் பதிவு முடிவடைந்தது. பிற பகுதிகளில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வாக்குப் பதிவு முடிவுக்கு வந்தது.

வாக்குப் பதிவின் முடிவில் வாக்களித்து விட்டு வெளியே வந்த வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட எக்சிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு பெரும் தோல்வி கிடைக்கவிருப்பதாக தெரிய வந்துள்ளது. ஹோவர்டும் தனது சொந்தத் தொகுதியில் தோல்வி அடைகிறார்.

முதல் கட்ட தேர்தல் நடந்த விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாகாணங்களில் ஸ்கை டிவி 31 தொகுதிகளில் நடத்திய எக்சிட் போலில், தொழிலாளர் கட்சிக்கு 30 தொகுதிகள் கிடைக்கும் எனத் தெரிய வந்துள்ளது. தொழிலாளர் கட்சியின் சார்பில் பிரதமர் பதவியேற்கவுள்ள கெவின் ரூட் பெரும் வெற்றி பெறுவார் எனத் தெரிய வந்துள்ளது.

அவரது கட்சி ஆட்சியைப் பிடிக்க 16 தொகுதிகளே தேவை. அது பிற மாகாணங்களில் நிச்சயம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதால், கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியை இழப்பது உறுதியாகியுள்ளது.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட வாக்களித்த 2787 வாக்காளர்களில் 53 சதவீதம் பேர் தொழிலாளர் கட்சிக்கு ஆதரவாகவம், 47 சதவீதம் பேர் கன்சர்வேட்டிவ் கட்சிக்கும் வாக்களித்துள்ளனர்.

ஆட்சியை இழப்பதோடு மட்டுமல்லாமல் தனது தொகுதியான பென்னிலாங்கிலும் ஹோவர்ட் தோல்வி அடைவது உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கடந்த 78 ஆண்டுகளில், சொந்தத் தொகுதியில் தோல்வி அடையும் முதல் பிரதமர் என்ற பெயர் ஹோவர்டுக்குக் கிடைக்கப் போகிறது.

ஹோவர்ட் தீவிர அமெரிக்க ஆதரவாளர். ஆனால் தொழிலாளர் கட்சித் தலைவர் கெவின் ரூட் ஆசிய நாடுகள் மீது பற்று கொண்டவர். தீவிர அமெரிக்க எதிர்ப்பாளர். தான் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக ஈராக்கிலிருந்து ஆஸ்திரேலிய படைகளை வாபஸ் பெற உத்தரவிடுவேன் என ஏற்கனவே ரூட் கூறியுள்ளார்.

ஆசிய நாடுகளுடனும், சீனாவுடனும் மிக நெருங்கிய உறவை மேம்படுத்தவும் ரூட் முயலுவார் எனத் தெரிகிறது.

முன்னதாக சிட்னியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்திற்கு ஓட்டுப் போட வந்த ஹோவர்ட்டை, தொழிலாளர் கட்சி ஆதரவாளர்கள் சூழ்ந்து கொண்டு கோஷமிட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ரூட், க்வீன்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள பிரிஸ்பேன் நகரில் வாக்களித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+