முஷாரப்பின் அவசர நிலை பிரகடனம் செல்லும்: சுப்ரீம் கோர்ட்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது செல்லும் என்று அந்நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் அதிபர் முஷாரப் அவசர நிலையை பிரகடனம் செய்ததை எதிர்த்து டிக்கா இக்பால் முகம்மது கான் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவசர நிலை பிரகடனம் செல்லாது, அதன் பின்னர் அதிபர் முஷாரப் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று தனது மனுவில் கான் கோரியிருந்தார்.
இந்த மனுவை ஏழு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்தது. பின்னர் இந்த பெஞ்ச் அளித்த தீர்ப்பில், நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்த காரணத்தால்தான் இந்த கடுமையான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருந்தது. தீவிரவாத செயல்கள் தலைவிரித்தாடின. குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அதிகரித்திருந்தன. எனவேதான் நிலைமையை சரி செய்ய அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
அவசரமாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் செளகத் அஜீஸ், அதிபர் முஷாரப்புக் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்தே அதிபர் அவசர நிலையை அமல்படுத்தினார்.
ஜனநாயகத்தின் முக்கியத் தூண்களான நீதித்துறை, அரசியலமைப்பு, அரசு நிர்வாகம் உள்ளிட்டவை முற்றிலும் செயலிழந்த காரணத்தால்தான் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. எனவே இந்த நடவடிக்கை செல்லும்.
ஜனநாயகத்தை மீண்டும் தழைக்கச் செய்யும் வகையில் நேர்மையான முறையில், நியாயமான வழிகளில் தேர்தலை நடத்துவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என்று தங்களது தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications