துபாயில் பெண்களுக்கு ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் பெண்களுக்காக பெண் பயிற்சியாளர்களால் நடத்தப்படும் ஆளுமைத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.

டிசம்பர் 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை பர்துபாய் விஸ்டம் இன்ஸ்டிட்யூட்டில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளது.

கோபம், தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுதல், குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ளுதல், எண்ணங்களை தூய்மைப்படுத்தல், செயல்களை வளப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் தரப்படவுள்ளன.

முதலில் பதிவு செய்யும் ஐம்பது நபர்களுக்கு மட்டுமே பயிற்சி முகாமில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

இந்த பயிற்சி முகாமில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டும் அனுமதிக்கப்படுவர். பயிற்சி முகாமில் கலந்து கொள்வதற்கு கட்டணம் 20 திர்ஹாம்கள். மதிய உணவு, தேநீர், பயிற்சி குறிப்பேடுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மதுரை, தஞ்சை, சென்னை மற்றும் வெளிநாடுகளில் பல இடங்களில் நடத்தப்பட்ட இந்த பயிற்சி முகாம் தற்போது துபாயில் நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சி முகாம் குறித்த விபரங்களுக்கு 050-2557237, 050-5196433, 050-3851929 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

டிசம்பர் 2ம் தேதியன்று ஐக்கிய அமீரக தேசிய தினம் என்பதால் அன்றைய தினம் அரசு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+