பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கிடையே கடந்த 22ம் தேதி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 231 ரன்கள் எடுத்தது. இந்தியா 276 ரன்களைச் சேர்த்தது.
2வது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 247 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதையடுத்து 203 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா 2வது இன்னிங்ஸைத் தொடங்கியது.
நேற்றைய 4வது நாள் ஆட்ட முடிவில் சச்சின் டெண்டுல்கர் 34 ரன்களுடனும், கங்குலி 48 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்தது. இதனால் 32 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு இந்தியா சென்றது.
வெற்றியைத் தொட்டு விட்ட சந்தோஷத்துடன் இன்று இந்தியா தனது கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கங்குலி மேலும் ரன்கள் சேர்க்காத நிலையில் அக்தர் பந்து வீச்சில் வீழ்ந்தார்.
பின்னர் களமிறங்கிய வி.வி.எஸ். லட்சுமணும், சச்சினும் ஜோடி சேர்ந்து அணியை வெற்றி இலக்குக்கு இட்டுச் சென்றனர். 4 விக்கெட் இழப்பிற்கு 61.1 ஓவர்களில் 203 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா.
இதன் மூலம் 3 டெஸ்ட் போட்டிள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
சச்சின் டெண்டுல்கர் 56 ரன்களும், லட்சுமண் 6 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். பாகிஸ்தானின் சோயப் அக்தர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கும்ப்ளேவுக்கு மிகவும் ராசியான இந்த ஸ்டேடியத்தில், கேப்டனாக அவர் பங்கேற்ற முதல் போட்டியிலேயே இந்தியா வெற்றியைச் சுவைத்துள்ளது.
இந்த போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சேர்ந்து 7 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய கேப்டன் அனில் கும்ளேவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!













Click it and Unblock the Notifications